அமெரிக்க குண்டுவீச்சுக்குப் பிறகு... Kheibar ஏவுகணையால் இஸ்ரேலைத் தாக்கிய ஈரான்
22 ஆனி 2025 ஞாயிறு 19:07 | பார்வைகள் : 5805
ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கிய சில மணி நேரங்களில், இஸ்ரேல் மீதான தாக்குதல்களில் ஈரான் தனது மிகப்பெரிய ஏவுகணையைப் பயன்படுத்தியுள்ளது.
இன்றைய தாக்குதலில் Khorramshahr-4 ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, ஈரானிய அரசு தொலைக்காட்சி அதன் கோப்பு காட்சிகளை ஒளிபரப்பியது.
அமெரிக்காவின் நடவடிக்கைக்குப் பிறகு ஈரான் குறைந்தது 40 ஏவுகணைகளை ஏவியதாக கூறப்படுகிறது.
அவற்றில் Khorramshahr-4 ஏவுகணைகளும் அடங்கும் என்று ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணையானது 2,000 கிமீ தூரம் பாயக்கூடியது என்றும் 1,500 கிலோ அளவுக்கு வெடிப்பொருட்களைக் கொண்டதாக கூறப்படுகிறது.
1980 களில் ஈராக்-ஈரான் போரின் போது கடும் சண்டை நடந்த ஈரானிய கோர்ராம்ஷஹர் நகரத்தின் நினைவாக இந்த ஏவுகணைக்கு பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஏவுகணையானது கைபார் என்றும் அழைக்கப்படுகிறது, இது தற்போது சவுதியில் உள்ள ஒரு யூத கோட்டையின் பெயரால் அழைக்கப்படுகிறது, இது 7 ஆம் நூற்றாண்டில் கைப்பற்றப்பட்டது.
ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இன்று காலை ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது 11 பேர் காயமடைந்ததாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
ஈரானிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வடக்கு டெல் அவிவில் உள்ள ஒரு பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியும் அடங்கும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan