இந்த வரவுசெலவுத்திட்டம் ஒரு கொள்ளை! - மீண்டும் 49.3?
15 ஆடி 2025 செவ்வாய் 21:12 | பார்வைகள் : 2489
பிரதமர் பிரான்சுவா பெய்ரூ இன்று புதிய வரவுசெலவுத்திட்டத்தை சமர்பித்தார். 40 பில்லியன் யூரோக்களை சேமிப்பது எனும் இமாலய இலக்கை நோக்கி அவரது வரவுசெலவுத்திட்டம் இருந்தது. பலதரப்பட்ட வழிகளில் இந்த சேமிப்பு சாத்தியமாகும் என பிரதமர் அறிவித்தார்.
உடனடியாகவே இந்த வாசிப்பு எதிர்கட்சிகளை கொந்தளிக்கச் செய்தது. குழுவாக இணைந்து செயற்படும் கொள்ளை போன்று பிரதமரிடன் திட்டங்கள் இருந்தது என தீவிர இடதுசாரிகள் கொந்தளித்துள்ளனர்.
’பெய்ரூ அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும்!” என LFI கட்சித்தலைவர் Jean-Luc Mélenchon தெரிவித்துள்ளார். “அழிவு மற்றும் அநீதியை இனி ஏற்றுக்கொள்ளக்கூடாது. மக்ரோனின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசரம்." எனவும் அவர் குறிப்பிட்டார்.
”பிரெஞ்சு மக்களுக்கான அனைத்து சிவப்பு கோடுகளையும் பெய்ரூவின் திட்டம் கடக்கிறது. மக்களிடம் இறுதியாக உள்ள இரத்தத்தையும் கண்ணீரையும் உறிஞ்சும் திட்டம் இது!” என ரீபப்ளிக்கன் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் Eric Ciotti தெரிவித்துள்ளார்.
சோசலிச கட்சித்தலைவர் Boris Vallaud தெரிவிக்கையில், “இது மிருகத்தனமானது. ஏற்றுக்கொள்ள முடியாதது. கொஞ்சம் இருப்பவர்களிடம் அதிகம் கேட்பதும், அதிகம் இருப்பவர்களிடம் கொஞ்சம் கேட்பதும் முறையற்றது! இது ஏற்றுக்கொள்ள முடியாத பட்ஜெட்!” என தெரிவித்தார்.
”வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்ற பிரதமர் 49.3 அரசியலமைப்பை பயன்படுத்தினால் (வாக்கெடுப்பின்றிய நிறைவேற்ற சட்டம்) நாங்கள் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவருவோம்!” என LFI கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan