Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க விசா குறித்து வெளியான விசேட அறிவிப்பு

அமெரிக்க விசா குறித்து வெளியான விசேட அறிவிப்பு

10 ஆடி 2025 வியாழன் 06:16 | பார்வைகள் : 1192


அமெரிக்க விசா பெறுவதற்கு மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கான நடைமுறையை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது.

எச்-1பி விசா என்பது தொழில்நுட்ப திறன் வாய்ந்த பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி அளிக்கிறது.

படிக்க வரும் மாணவர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் தனித்தனி விசாக்கள் உண்டு.

இதனிடையே, கடந்த ஜூலை 4ம் திகதி, வரிக்குறைப்பு மசோதா சட்டமாக்கப்பட்டதையடுத்து, தொழில்முனைவோர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான விசா பெறுவதற்கு, ஒரு குறிப்பிட்ட தொகையை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.

பணவீக்கத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் இந்தக் கட்டணம் மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் அமுலுக்கு வரும் இந்தத் திட்டத்தின் கீழ், அனைத்து குடியுரிமை இல்லாத விசா விண்ணப்பங்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிப்ளோமேடிக் விசாக்கள் மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் இந்த புதிய நடைமுறையினால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவர்களுக்கு நிதிச்சுமை அதிகரிக்கிறது.

எனவே, அமெரிக்காவுக்கு சுற்றுலா மற்றும் கல்வி பயில்வோர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்