நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயர் பரிந்துரைத்த இஸ்ரேல் பிரதமர்

8 ஆடி 2025 செவ்வாய் 12:33 | பார்வைகள் : 638
அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு வழங்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக ட்ரம்பின் முயற்சியை பாராட்டி அவர் இதனை ட்ரம்பிற்கு பரிந்துரைத்துள்ளார்.
இதேவேளை வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது ட்ரம்பிற்கு ஒரு நியமனக் கடிதத்தை நெதன்யாகு வழங்கினார்.
'நோபல் பரிசுக் குழுவிற்கு நான் அனுப்பிய கடிதத்தை உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
அமைதிப் பரிசுக்கு உங்களை பரிந்துரைப்பது மிகவும் தகுதியானது. ஜனாதிபதி ட்ரம்ப் அதைப் பெற வேண்டும்' என்று நெதன்யாகு கூறினார்.
குறிப்பாக மத்திய கிழக்கில், நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் ட்ரம்பின் தலைமையை இஸ்ரேல் பிரதமர் பாராட்டி உள்ளார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1