அஜித் அதிரடி பதிலால் ரசிகர்கள் உற்சாகம்...!
6 ஆடி 2025 ஞாயிறு 14:28 | பார்வைகள் : 3328
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. 250 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கம் மூலமாக வசூல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து கார் ரேஸ் பந்தயங்களில் ஆர்வமாக இருக்கும் அஜித், நவம்பர் மாதத்தில் தன்னுடைய அடுத்த பட ஷூட்டிங்கைத் தொடங்குவார் என சொல்லப்படுகிறது. அந்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். இந்நிலையில் அஜித் கார் ரேஸ் சம்மந்தப்பட்ட படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அவர் கார் ரேஸ் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது ஒரு செய்தியாளர் “பிராட் பிட் சமீபத்தில் F1 படத்தில் நடித்தார். அது போல நாங்கள் அஜித்தையும் ஒரு படத்தில் எதிர்பார்க்கலாமா?” எனக் கேட்டார். இதற்குப் பதிலளித்த அஜித் “நான் என் படங்களில் ஸ்டண்ட் காட்சிகளை நானே நடிக்கிறேன். அதனால் ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் போன்ற கார் ரேஸ் சம்மந்தப்பட்ட படங்களில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தால் கண்டிப்பாக அதில் நடிப்பேன்” எனக் கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan