ஏன் மாமியார்களுக்கு மருமகள்களை பிடிக்காது? காரணம் தெரியுமா..?
4 ஆனி 2025 புதன் 19:46 | பார்வைகள் : 4809
மாமியார் மருமகள் இடையே சண்டை சச்சரவுகள் சகஜம். இது ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் சாதாரண விஷயம்தான் என்றாலும் சற்று யோசிக்க வேண்டியதும் கூட.. எந்த ஒரு சிறு பிரச்சினைக்கும் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடக்கும். இது சிறிய சண்டைக்கு வழிவகுக்கிறது.
பல வீடுகளில் தனித்தனியாக இருப்பார்கள்.. அது மிகவும் பொதுவானது. உங்கள் வீட்டில் மாமியார் சண்டை ஏன் நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.
ஒவ்வொரு வீட்டிலும் உண்மையான சண்டைகள் எங்கிருந்து தொடங்குகின்றன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? வங்க இந்த பதிவில் ஏன் மாமியார்கள் மருமகளிடம் சண்டை போடுகிறார்கள் என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்..
1. மருமகள் வீட்டிற்கு வந்ததிலிருந்து மகன்கள் தங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதில்லை என்று மாமியார்கள் நினைக்கின்றனர்.. எங்கே தங்கள் மகன் தம்மிடம் இருந்து பறிக்கப்படுவான் என்ற பயம் அவர்களுக்குள் தொடங்குகிறது. ஒரு காலத்தில் தாயின் பேச்சைக் கேட்ட மகன், திருமணமாகி மனைவி வந்தவுடன் அவளுடைய பேச்சை கேட ஆரம்பிக்கிறான்.. அதனால் தாய்க்கு அந்த இடத்தில் இருந்து பிரச்சனை தொடங்குகிறது.
2. அதுமட்டுமல்லாமல் மருமகளும் மகனும் மட்டும் வெளியில் செல்லும்போது தாயின் மனம் இனம் புரியாமல் கலங்கும். அதனால் கோபம் போன்ற உணர்வு அதிகரிக்கிறது. இதனால், மருமகள்கள் மாமியாரின் பொறாமைக்கு ஆளாகின்றனர். இது லேசான கோபத்தின் வடிவில் காட்டப்படுகிறது.
3. என் மருமகள் வீட்டில் எந்த வேலையும் செய்வதில்லை என பல மாமியார்கள் புகார் கூறுகிறார்கள். வேலைக்குச் செல்லும் மருமகள்கள் காலைக் காபி, டீ, டிபன், இரவு உணவின் போது உதவி போன்றவற்றைச் செய்யாமல், எப்போதும் படுக்கையறையிலேயே இருக்கிறார் என்று பல மாமியார்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.
4. மதம் சார்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், வீடுகளில் பூஜைகள் செய்வதாகவும், மருமகள் அப்படிப்பட்ட விஷயங்களில் இருந்து வெகு தொலைவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தெய்வங்களை வழிபடவில்லை என்றால், குறைந்த பட்சம் உதவி செய்ய விரும்புகிறார்கள் மாமியார்கள். ஆனால் அவர் விரும்பியதை மருமகள்கள் செய்யவில்லை என்றால், அதிருப்தி தொடங்குகிறது. எந்த வேலையும் செய்யவில்லை என்று உள்ளுக்குள் கொதித்துக்கொண்டு உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள் மாமியார்கள்.
சில நேரம் வரும்போது வார்த்தைகளாக வெளிவரும். இப்படித்தான் சண்டை தொடங்குகிறது.
5. சில பெண்கள் மற்றவர்கள், அண்டை வீட்டார் மற்றும் உறவினர்களுடன் விரைவாக பழகுவார்கள். பெரியவர்களிடமும் அன்பாக பழகுவார்கள். இந்த குணாதிசயங்களால் அவரை மற்ற மாமியார்கள் விரும்பி பாராட்டுவார்கள்.. இதனால் அவருடைய மாமியார் குறைப்பேச ஆரம்பிப்பார்.
ஆனால் யாருடனும் பேசவில்லை, யாரையும் வாழ்த்தவில்லை, யாரையும் மதிக்கவில்லை என்றால் கோபப்படுவார்கள்.. அதுவும் மோதலுக்கு காரணமாக அமையும். இப்படித்தான் மாமியார்களுக்குள் சண்டை சச்சரவுகள் நடக்கும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan