பெங்களூருவில் நடைபெற இருந்த RCB அணியின் வெற்றி பேரணி ரத்து
4 ஆனி 2025 புதன் 18:46 | பார்வைகள் : 2914
பெங்களூருவில் நடைபெற இருந்த RCB அணியின் வெற்றி பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது.
2025 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் RCB அணி, PBKS அணியை வீழ்த்தி, கோப்பையை வென்றது.
18 வருட ஐபிஎல் வரலாற்றில், முதல்முறையாக RCB அணி கோப்பையை வென்றதால், நாடு முழுவதும் RCB ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
RCB வீரர்களை வரவேற்க துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பெங்களூரு விமான நிலையம் சென்றுள்ளனர்.
ஆர்.சி.பி அணி இன்று மதியம் பெங்களூருவை வந்ததடைந்த பின்னர், மாலை 4 மணியளவில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்க உள்ளனர்.
வீரர்கள் வரும் சாலையின் இருபுறமும் நின்று ரசிகர்கள் நின்று உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இதனையடுத்து, மாலை 5 மணிக்கு திறந்த வெளி பேருந்தில், கர்நாடக சட்டமன்றம் தொடங்கி சின்னசாமி மைதானம் வரை வெற்றி பேரணி நடைபெறும் என RCB அணி நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. பேரணிக்கு மாற்றாக, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வெற்றி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மைதானத்தில் நடைபெறும் விழாவிற்கு அனுமதி பாஸ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால், பெரும்பாலான ரசிகர்கள் கலந்து கொள்ள முடியாது. அரசின் இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan