10 அணுகுண்டுகள் தயாரிக்க போதுமான யுரேனியத்தை சேர்த்துள்ள மேற்காசிய நாடு - IAEA அறிக்கை
4 ஆனி 2025 புதன் 07:06 | பார்வைகள் : 2615
10 அணுகுண்டுகளை தயாரிக்கும் அளவிற்கு யுரேனியத்தை சேர்ந்துள்ள மேற்காசிய நாடொன்று சேர்த்துவைத்துள்ளதாக IAEA வெளியிட்டுள்ளது.
ஈரானில் 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யூரேனியம் 408.6 கிலோகிராம் அளவிற்கு உயர்ந்துள்ளதாக IAEA (International Atomic Energy Agency) தனது ரகசிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது சுமார் 10 அணுகுண்டுகள் உருவாக்கத் தேவையான அளவாகும்.
இது கடந்த மூன்று மாதங்களில் 50 சதவீதம் அதிகரிப்பு, என்கிறது The Wall Street Journal.
இந்த 60 சதவீதத்தை 90 சதவீதமாக மாற்றினால், குறைவான நாட்களில்அணு ஆயுதத்திறன் பெறலாம் என அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கிறது.
IAEA தலைவர் ரபாயல் கிரோஸி, “ஈரான் போன்று அணுகுண்டு இல்லாத நாடு இவ்வளவு உயர்ந்த அளவில் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை வைத்திருப்பது மிகவும் கவலைக்குரியது” என தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஈரான் தனது அணுஆயுத திட்டம் "சமாதான பாவனைக்காக" மட்டுமே என உறுதி அளிக்கிறது.
ஆனால், IAEA மற்றும் மேற்கு நாடுகள் ஈரான் இன்னும் இரகசிய அணு செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றன.
டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா புதிய அணு ஒப்பந்தத்திற்கான முன்மொழிவை வழங்கியுள்ளது.
ஆனால், ஈரான் அதை நிராகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தகவல் கூறுகிறது.
ஓமன் வெளிவிவகார அமைச்சர் இந்த திட்டத்தை மத்தியஸ்தம் செய்து வழங்கியிருந்தாலும், ஈரான் அமெரிக்காவின் முன்மொழிவை நிராகரிக்கும் வகையில் எதிர்மறையாக பதிலளித்துள்ளது.
இதற்கிடையில், ஈரானின் அணுசக்தி செயற்பாடுகளை நிறுத்த சர்வதேச சமூகம் "இப்போது செயல்பட வேண்டும்" என்பதை இந்த கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
"எண்ணற்ற எச்சரிக்கைகள் இருந்தபோதிலும்... ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை முடிக்க முழுமையாக உறுதியாக உள்ளது" என்று நெதன்யாகு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
NPT ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாகவும், பொருளாதாரத் தடைகள் மீண்டும் சுமத்தப்பட்டால் அதன் அணுசக்தி கொள்கையை மாற்றிக் கொள்ளப் போவதாகவும் ஈரான் அச்சுறுத்தியுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan