‘தக் லைஃப்’ படம் எப்படி?
3 ஆனி 2025 செவ்வாய் 17:21 | பார்வைகள் : 5531
கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியிருக்கிறது. 38 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’. சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் புரமோஷன் முழு வீச்சில் நடைபெற்ற நிலையில், டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மும்பையில் தக் லைஃப் படத்தின் இந்தி வெர்ஷன் தணிக்கைச் செய்யப்பட்ட நிலையில், படத்தை பார்த்ததாக சொல்லும் சோஷியல் மீடியா விமர்சகர் உமைர் சந்து, "தக் லைஃப் திரைப்படம் ஒரு கல்ட் கிளாசிக் த்ரில்லர், நடிகர்களின் பர்ஃபார்மன்ஸ்கள் எல்லாமே புல்லரிக்க வைத்துவிடும். கமல்ஹாசன் மற்றும் எஸ்டிஆர் நடிப்பிலும் பவர் பேக்ட் ஆக்ஷன் காட்சிகளிலும் அடிதூள் கிளப்பிட்டாங்க.
ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மணிரத்னத்தின் டெட்லி காம்போ மீண்டும் ரசிகர்களை மிரள விட காத்திருக்கிறது. 5க்கு 3.5 ஸ்டார் ரேட்டிங்" கொடுத்து ட்வீட் போட்டுள்ளார். இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. நெட்டிசன்கள் பலரும் இவர் உண்மையில் படம் பார்த்தாரா? அல்லது விளம்பரத்துக்காக இப்படி கருத்து பதிவிட்டுள்ளாரா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan