காசாவில் உணவுவிநியோகம் பகுதிக்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதல் - 26 பேர் பலி
1 ஆனி 2025 ஞாயிறு 17:19 | பார்வைகள் : 4048
காசாவின் ரஃபாவில் உணவுவிநியோக நிலையத்திற்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள் மேற்கொண்ட தாக்குதலில் 26 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்கா ஆதரவுடனான மனிதாபிமான உதவி பொருட்கள் விநியோகிக்கப்படும் நிலையத்திற்கு அருகில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உணவுகளை பெறுவதற்காக காத்திருந்தவேளை அந்த பகுதியை நோக்கிவந்த இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதலை மேற்கொண்டன என உள்ளுர் ஊடகவியலாளர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களினது உடல்களையும் காயமடைந்தவர்களையும் கழுதைவண்டிகளில் செஞ்சிலுவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதை காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் வெளியாகியுள்ளன
.
பெருமளவு பாலஸ்தீனியர்கள் அல்அலாம் சுற்றுவட்டத்தில் காணப்பட்டவேளை இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதலில் ஈடுபட்டன என கரீப் என்ற உள்ளுர் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்டவர்களும் காயமடைந்தவர்களும் நீண்டநேரம் நிலத்தில் விழுந்த நிலையில் காணப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அந்த பகுதிக்கு மீட்புபணியாளர்கள் செல்ல முடியாத நிலை காணப்பட்டது என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக மக்கள் கழுதை வண்டிகளை பயன்படுத்தி காயமடைந்தவர்கள் உயிரிழந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
26 கொல்லப்பட்டுள்ளனர் 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என செஞ்சிலுவை மருத்துவமனை தெரிவித்துள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan