இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதல் - ஹிஸ்புல்லா பயங்கரவாதி உயிரிழப்பு
1 ஆனி 2025 ஞாயிறு 06:01 | பார்வைகள் : 2234
லெபனானில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நீடித்து வருகிறது.
இந்த போரில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுவினர் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்த குழுக்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், லெபனானின் நபதியா மாகாணம் டிர் இஸ் சஹ்ரானி பகுதியில் உள்ள சாலையில் இன்று கார் சென்றுகொண்டிருந்தது.
அந்த காரை குறிவைத்து இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காரில் பயணித்த ஹிஸ்புல்லா பயங்கரவாதி கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்ட பயங்கரவாதி ஹிஸ்புல்லா ஏவுகணை, ராக்கெட் பிரிவு தளபதியாக செயல்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan