மீண்டும் கொரோனா - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
31 வைகாசி 2025 சனி 07:31 | பார்வைகள் : 4348
ஆசிய நாடுகளில் 28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கொரோனா வைரஸின் புதிய வேரியண்ட் மீண்டும் பரவத் தொடங்கியுள்ள நிலையில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
2019 இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி பல லட்சம் உயிர்களை பலிக் கொண்டது. அதன் பாதிப்பிலிருந்து உலகம் மீண்டு வர சில ஆண்டுகள் ஆனது.
தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் கொரோனாவின் புதிய வேரியண்ட் பரவத் தொடங்கியுள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றான இது இந்தியா மற்றும் பல்வேறு ஆசிய நாடுகளில் பரவியுள்ளது.
சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியும்படி வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் மே 28 வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது.
இதில் கேரளாவில் அதிகளவில் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் உலக அளவில் புதிய கொரோனா வேரியண்டால் 28 நாட்களில் 91,583 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் கொரோனா பாதிப்புள்ள நாடுகளில் பொதுமக்கள் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan