ரோஸ்ட் சிக்கன் மசாலா
30 வைகாசி 2025 வெள்ளி 16:33 | பார்வைகள் : 2873
மசாலா சிக்கன் ரோஸ்ட் ஆனது சப்பாத்தி, வெஜ் புலாவ் உள்ளிட்ட உணவுகளுக்கு சிறந்த சைடிஷ் ஆக இருக்கும். இதனை செய்வது மிகவும் எளிது, ருசியாகவும் இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் இந்த ரோஸ்ட் செய்து விட்டால் கூடுதலாக உணவுகளை சாப்பிடுவார்கள்.
குறிப்பாக சிக்கனை மசாலா தடவி, பின்னர் ரோஸ்ட் செய்து சாப்பிடும் போது சுவை அளப்பரியது. இதற்கு தேவையான பொருட்களை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும் அதாவது சிக்கன் (கால், மார்பு, அல்லது முழு கோழி) வாங்கிக் கொள்ள வேண்டும்.
அரை லிட்டர் தயிர் இதற்கு போதும். எலுமிச்சை சாறு கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு விழுது வதக்குவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மசாலாப் பொடிகளான மிளகாய் தூள், சீரகம், சோம்பு, கரம் மசாலா, தனியா தூள் ஆகியவற்றை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், தக்காளி வெட்டி வைக்க வேண்டும். அதேபோல் எண்ணெய், உப்பு, புதினா, கொத்தமல்லி தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து செய்முறை பற்றி பார்க்கலாம். சிக்கனை துண்டுகளாக வெட்டி, மசாலாப் பொடி, தயிர், எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும். குறைந்தது 30 நிமிடம் அல்லது ஒரு மணி நேரம் அதனை ஊற வைக்க வேண்டும்.
நறுக்கிய வெங்காயத்தை , தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பை பற்ற வைத்து அதன் மேல் கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கி, தக்காளி விழுதைச் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
மசாலா கலவையை சேர்த்து வதக்கி, பின்னர் ஊற வைத்த சிக்கனைச் சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும். சிக்கன் வெந்ததும், புதினா, கொத்தமல்லி தூவி விட வேண்டும். சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றுடன் வெஜ் புலா, வெரைட்டி சாதம் ஆகியவற்றுடனும் இந்த ரோஸ்டை சேர்த்து சாப்பிடலாம். இதனை நீங்களும் வீட்டில் செய்து அதன் ருசியை குடும்பத்துடன் ரசித்து மகிழுங்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan