விஜய் எடுத்த அதிரடி முடிவு..!
28 வைகாசி 2025 புதன் 14:09 | பார்வைகள் : 5776
விஜயின் 69 ஆவது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ஜனநாயகன். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹெச். வினோத் இயக்கி வருகிறார். இதனை கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
அரசியல் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், நரேன், பிரியாமணி, பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது அரசியல்வாதியாக மாறி உள்ள விஜயின் கடைசி படம் இது என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
விஜய் எடுத்.uuஜனநாயகன்' பட அப்டேட்!அதன்படி இப்படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது. எனவே அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி இந்த படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காணவும், அதை கொண்டாடி தீர்க்கவும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்னும் சில நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கடந்த மே 26 ஆம் தேதி விஜயின் போர்ஷன் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. இதற்கிடையில் வருகின்ற ஜூன் 22ஆம் தேதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ஜனநாயகன் படத்தின் டீசர் அல்லது ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் நடிகர் விஜய் ஜனநாயகன் படத்தின் ரிலீஸுக்கு ஒரு மாதத்திற்கு முன்பிலிருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளையும் வெளியிடலாம், எனவே என்னுடைய இந்த பிறந்த நாளை எந்த அப்டேட்டும் வெளியிட வேண்டாம் என்று கூறிவிட்டாராம். இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan