ஈரானுக்கு ஆதரவாக வட கொரியா
20 ஆனி 2025 வெள்ளி 09:18 | பார்வைகள் : 1944
இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொண்டுள்ள ஈரானுக்கு வட கொரியா ஆதரவு தெரிவித்துள்ளது.
மத்திய ஆசியாவில் முழுமையான போரின் அபாயத்தை இஸ்ரேல் அதிகரித்து வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக வட கொரியாவின் அரசு ஊடகமான KCNA செய்தி வெளியிட்டுள்ளது.
"இன்று உலகம் காணும் நிகழ்வுகள், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளால் ஆதரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் இஸ்ரேல், மத்திய கிழக்கின் அமைதியை பாதித்த புற்றுநோய், ஈரானுக்கு வட கொரியா ஆதரவு என்பதையும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை அழிப்பதில் முக்கிய குற்றவாளி என்பதையும் தெளிவாக நிரூபிக்கிறது" என்று அந்த அதிகாரி கூறியதாக KCNA தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிரான வடகொரியாவின் அறிக்கை, ஈரானுடனான அதன் நெருங்கிய உறவைப் பிரதிபலிக்கிறது.
ஈரானும் வடகொரியாவும் 1973 முதல் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளன.
ஈரானை போல வடகொரியாவும் அதன் ஆயுதங்கள் மற்றும் அணுசக்தித் திட்டங்கள் காரணமாக அமெரிக்கா மேற்கு நாடுகளால் தொடர்ந்து தடைகளுக்கு இலக்காகி வரும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan