டி20 வரலாற்றில் மூன்றுமுறை சூப்பர் ஓவர்! போராடி வெற்றிபெற்ற அணி
17 ஆனி 2025 செவ்வாய் 17:13 | பார்வைகள் : 2308
நேபாளம் அணிக்கு எதிரான டி20 போட்டியில் நெதர்லாந்து மூன்றாவது முறையாக சூப்பர் ஓவரில் விளையாடி வெற்றி பெற்றது.
நெதர்லாந்து, நேபாளம் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் நடந்து வருகிறது.
நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.
முதலில் ஆடிய நெதர்லாந்து அணி 152 ஓட்டங்கள் எடுத்தது. தேஜா 35 ஓட்டங்களும், விக்ரம்ஜித் 30 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய நேபாளம் அணியும் 20 ஓவர்களில் 152 ஓட்டங்கள் எடுத்ததால் போட்டி டை ஆனது. இதனால் சூப்பர் ஓவர் (Super Over) முறை கடைபிடிக்கப்பட்டது.
நேபாளம் முதலில் ஆடி 19 ஓட்டங்கள் எடுக்க, நெதர்லாந்து அணியும் 19 ஓட்டங்கள் எடுத்தது. இதன் காரணமாக மீண்டும் சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது.
இந்த முறை நெதர்லாந்து முதலில் ஆடி 17 ஓட்டங்கள் எடுக்க, நேபாளம் அணியும் அதே ஸ்கோரை எட்டியதால் வரலாற்றில் முதல்முறையாக போட்டி 3வது சூப்பர் ஓவரை நோக்கி நகர்ந்தது.
இதில் ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து, நேபாளத்தின் இரண்டு விக்கெட்டுகளையும் ஓட்டங்கள் எடுக்காமலேயே காலி செய்தது.
அதன்படி 1 ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணியில், மைக்கேல் லெவிட் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.
மூன்று முறை சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்ட முதல் போட்டியாக நெதர்லாந்து, நேபாளம் மோதல் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan