Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் தாக்குதலால் சிதைக்கப்பட்ட ஈரானின் அணுசக்தி மையம்

இஸ்ரேல் தாக்குதலால் சிதைக்கப்பட்ட ஈரானின் அணுசக்தி மையம்

16 ஆனி 2025 திங்கள் 10:57 | பார்வைகள் : 2394


இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்களால் ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி மையம் சேதமடைந்துள்ளதை சர்வதேச அணுசக்தி முகமை உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி மையம் சேதமடைந்துள்ளதை சர்வதேச அணுசக்தி முகமை உறுதி செய்துள்ளது.

தெற்கு தெஹ்ரானில் இருந்து 400 கி.மீ., தொலைவில் உள்ள இஸ்பஹான் யுரேனியம் மாற்று ஆலை பயங்கர சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டம் பல மாதங்கள் தாமதப்படுத்தப்படலாம் என்று எச்சரித்துள்ளது.

அதேவேளையில், 1,640 அடி ஆழத்தில் மலைக்குள் அமைந்துள்ள போர்டோ அணுசக்தி மையம் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளது.

இந்த சூழலில், வியன்னாவில் சர்வதேச அணுசக்தி முகமை அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று கூடுகிறது.

இந்தக் கூட்டத்தில் ஈரான் அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மற்றும் யுரேனியத்தின் இருப்பு குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட இருக்கிறது.    

 

வர்த்தக‌ விளம்பரங்கள்