லாஸ் ஏஞ்சல்ஸுக்கு தேசிய காவல்படையை அனுப்ப தடை உத்தரவு!
14 ஆனி 2025 சனி 05:49 | பார்வைகள் : 2380
ட்ரம்ப் நிர்வாகம் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு கலிபோர்னியாவின் தேசிய காவல்படையை அனுப்புவதை ஒரு கூட்டாட்சி நீதிபதி தடுத்து நிறுத்தியுள்ளார்.
மேலும் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் கூறியுள்ளார்.
எனினும், படையினரை கட்டுப்பாட்டை கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசமிடம் திருப்பி அனுப்பும் நீதிபதியின் உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வராது.
டரம்ப் நிர்வாகம் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய அவகாசம் அளிக்கும் வகையில், நீதிபதி வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை உத்தரவை நிறுத்தி வைத்தார்.
இதனிடையே, நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக டரம்ப் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது.
நியூசம்மின் ஒப்புதல் இல்லாமல் படையினரை அனுப்ப உத்தரவிட்டதற்காக திங்களன்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது மநில அரசு வழக்குத் தொடர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan