சுற்றுலாப்பயணிகளை அழைக்கும் சுவிஸ் சுற்றுலா அலுவலகம்
13 ஆனி 2025 வெள்ளி 13:49 | பார்வைகள் : 2357
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள் என சுற்றுலாப்பயணிகளை வருந்தி அழைக்கிறது சுவிஸ் சுற்றுலா அலுவலகம் ஒன்று.
சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்திலுள்ள Blatten என்னும் கிராமத்தின் பெரும்பகுதி நிலச்சரிவு ஒன்றினால் பாதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
அந்த கிராமம், Lötschental என்னும் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. அந்தப் பள்ளத்தாக்கு சுற்றுலாவுக்கு பிரபலமான ஒரு இடமாகும்.
ஆனால், அந்த நிலச்சரிவைத் தொடர்ந்து, அங்கு சுற்றுலா வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டதாம்.
ஏற்கனவே ஹொட்டல்களில் தங்க முன்பதிவு செய்தவர்கள் கூட, நிலச்சரிவு குறித்த செய்தியை அறிந்தபின், முன்பதிவை ரத்து செய்துவிட்டார்களாம்.
இந்நிலையில், உள்ளூர் சுற்றுலா அலுவலக இயக்குநரான Mathias Fleischmann என்பவர், Lötschental பள்ளத்தாக்கில் சுற்றுலா அனுமதிக்கப்படுகிறது என்றும், கேபிள் கார்கள் வழக்கம்போல் இயங்குவதாகவும், ஹொட்டல்கள் திறந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Blatten கிராமத்தைச் சுற்றி பயணிக்க மட்டுமே அனுமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆக, Lötschental பள்ளத்தாக்குக்கு சுற்றுலா வருவது பாதுகாப்பானதுதான் என்றும், சுற்றுலாப்பயணிகள் தாராளமாக சுற்றுலா வரலாம் என்றும் Lötschental பள்ளத்தாக்கு சுற்றுலா அலுவலகம் தெரிவித்துள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan