விராட் கோஹ்லியின் 1000 கோடி ஆடம்பர வாழ்க்கை
12 ஆனி 2025 வியாழன் 11:51 | பார்வைகள் : 3041
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோஹ்லி, தனது டெஸ்ட் ஓய்வைத் தொடர்ந்து பில்லியன் ரூபாய் வாழ்க்கை முறை மற்றும் வணிக சாம்ராஜ்யத்தை தொடங்குகிறார்.
சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோஹ்லி அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
ஆனால், மைதானத்திற்கு வெளியே அவரது வாழ்க்கை பிரம்மிக்க வைக்கும் வகையில் உள்ளது. ஆம், கிரிக்கெட்டிற்கு அப்பால் கோஹ்லி தனக்கென ஒரு பேரரசையே கட்டியெழுப்பியுள்ளார்.
சர்வதேச அளவில் பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவராக வலம் வரும் விராட் கோஹ்லியின் சொத்து மதிப்பு ரூ.1,050 கோடி என்று கூறப்படுகிறது.
2022ஆம் ஆண்டில் Sportico வெளியிட்ட பட்டியலில், ஆண்டு வருமானம் 33.3 மில்லியன் டொலர்களுடன் உலகளவில் அதிக ஊதியம் பெறும் முதல் 100 விளை
யாட்டு வீரர்களில் கோஹ்லி இடம்பெற்றுள்ளார்.
பிசிசிஐயின் ஒப்பந்தத்தின் கீழ் கோஹ்லி ஆண்டுதோறும் சுமார் ரூ.7 கோடியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உடனான ஐபிஎல் போட்டியில் இருந்து ரூ.15.5 கோடியும் வருமானம் ஈட்டுகிறார்.
எனினும் அவரது பிராண்டின் சக்தி, அவரை பல விடயங்களில் வேறொரு நிலைக்கு எடுத்துச் செல்கிறது.
அதாவது, கோஹ்லின் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ரூ.11.45 கோடி கிடைப்பதாக கூறப்படுகிறது. இது உலகளவில் அதிக பேர் பின்தொடரும் முதல் 20 நபர்களில் அவரை இடம்பிடித்தது.
பூமா, மிந்த்ரா போன்ற முன்னணி பிராண்ட்கள் மூலம் கோஹ்லி பாலிவுட் மெகா ஸ்டார்களையே விஞ்சிவிட்டார்.
Kroll's Celebrity Brand Valuation 2023 அறிக்கையின்படி, கோஹ்லியின் பிராண்ட் மதிப்பு 227.9 மில்லியன் டொலர்கள் என்று நிர்ணயித்தது. இதன்மூலம் அவர் ஷாரூக் கான் மற்றும் ரன்வீர் சிங் போன்றவர்களை முந்தியிருக்கிறார்.
கோஹ்லி தனது WROGN என்ற ஃபேஷன் நிறுவனத்தின் மூலம் வருமானம் ஈட்டுகிறார். இது ஐபிஎல் அணியான RCBக்கும் நிதியுதவி செய்கிறது.
அனுஷ்கா ஷர்மா உடன் சேர்ந்து Digit Insurance என்ற காப்பீட்டு நிறுவனத்தில் கோஹ்லி ரூ.2.2 கோடி முதலீடு செய்தார்.
அதேபோல் இந்தியா முழுவதும் உள்ள உடற்பயிற்சி மையங்களில் 90 கோடி முதலீடு செய்கிறார். Universal Sportsbiz என்பது விராட் கோஹ்லி ரூ.19.3 கோடி முதலீடு செய்த ஒரு ஃபேஷன் நிறுவனம் ஆகும்.
டெல்லியில் உள்ள தென் அமெரிக்க உணவகமான Nuevaவை அனுஷ்காவுடன் இணைந்து கோஹ்லி செயல்படுத்துகிறார்.
மேலும், ISL கால்பந்து கிளப்பில் FC கோவா மூலம் 12 சதவீத பங்குகளை கோஹ்லி வைத்துள்ளார்.
அதேபோல் Galactus Funwareயில் MPLக்குப் பின்னால் கேமிங் ஸ்டார்ட்-அப்பில் முதலீடு செய்தார். இதுபோல் இன்னும் சில நிறுவனங்களில் விராட் கோஹ்லி முதலீடு செய்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan