3,000 வாகனங்களுடன் பயணித்த சரக்குக் கப்பலில் பயங்கர தீ…! பசிபிக் பெருங்கடலில் 22 பேர் மீட்பு
8 ஆனி 2025 ஞாயிறு 18:35 | பார்வைகள் : 3622
அலாஸ்காவிற்கு அருகே பசிபிக் பெருங்கடலில் சென்றுகொண்டிருந்த சரக்குக் கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 22 பணியாளர்கள் மீட்புக் குழுவினால் மீட்கப்பட்டனர்.
கிட்டத்தட்ட 3,000 வாகனங்களை ஏற்றிக் கொண்டு சரக்குக் கப்பல் ஒன்று, அலாஸ்காவின் அலூடியன் தீவுகளுக்கு அருகே சென்று கொண்டிருந்தது.
பசிபிக் பெருங்கடலில் சென்றுகொண்டிருந்தபோது சரக்குக் கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அபாய சமிக்ஞை பெறப்பட்டதைத் தொடர்ந்து, கப்பலை நோக்கி மீட்புப் படை கிளம்பியது.
செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நம்பமுடியாத வகையில் 22 பணியாளர்களும் ஒரு Lifeboat மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் அவர்கள் அருகில் உள்ள வணிகக் கப்பலால் மீட்கப்பட்டனர்.
வியாழக்கிழமை வரை அவர்கள் மீட்புக் கப்பலில் இருந்தனர் என கப்பலின் மேலாண்மை நிறுவனமான, லண்டனை தளமாகக் கொண்ட சோடியாக் மேரிடைம் தெரிவித்துள்ளது.
தீ விபத்திற்கான காரணம் விசாரணையில் உள்ளது. மின்சார வாகனங்கள் சம்பந்தப்பட்ட தீ விபத்துக்கள் கட்டுப்படுத்தப்படாவிட்டால், தனித்துவமான ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடும்.
அதாவது கட்டமைப்பு சமரசம் அல்லது கடலுக்குள் அபாயகரமான பொருட்கள் வெளியிடப்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan