என் பேரு ஃபாத்திமா!!
3 ஆடி 2016 ஞாயிறு 10:53 | பார்வைகள் : 25125
இந்த வருடத்தின் பெப்ரவரி மாதம் அது. 26ம் திகதி. பரிசின் Théâtre du Châtelet அரங்கு. பிரெஞ்சு திரைப்படங்களின் கெளரவமாக கருதப்படும் César விருது வழங்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. விருதுகளின் இறுதியில் சிறந்த திரைப்படத்துக்கான விருது அறிவிக்கப்படுகிறது. அரங்கு அமைதியுடன் காத்திருக்க... அந்த திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்படுகிறது. "Fathima"
மொராக்கோவில் பிறந்த பிரெஞ்சு இயக்குனர் Philippe Faucon, Prière à la lune and Enfin, je peux marcher seule எனும் புத்தகத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கிய திரைப்படம் தான் இந்த Fathima. 2015ல் பிரெஞ்சு மற்றும் அரபு மொழியில் தயாரான இத்திரைப்படம் பிரான்ஸ் மற்றும் கனடாவில் வெளியானது. 79 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இந்த சிறிய திரைப்படம் முதன்முறையாக கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ஆனால் விழாவில் திரையிடல் மாத்திரமே செய்யப்பட்டது... எந்த விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்படவில்லை.
தொடர்ந்து, César விருதுக்கு நான்கு பரிந்துரைகளில் அனுப்பப்பட்டது. அதில் சிறந்த திரைப்படம், Most Promising Actress, Best Adaptation என மூன்று விருதுகளை இத்திரைப்படம் பெற்றுக்கொண்டது. தொடர்ந்து, சிறந்த திரைப்படத்துக்கான
French Syndicate of Cinema Critics விருது பெற்றுக்கொண்டது.
அத்தோடில்லாமல், Louis Delluc Prize விருதில் சிறந்த திரைப்படமாகவும், Lumières Awards விருதில் சிறந்த திரைக்கதை கொண்ட படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் பெற்றுக்கொண்டன.
இந்த திரைப்படத்தில் Fathima எனும் பிரதான கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த Soria Zeroual என்பவரை பற்றி கூறவேண்டும். இவர் நடித்த ஒரே திரைப்படம் இதுதான். அல்ஜீரியாவில் பிறந்த இவர் கடந்த 2002ல் தான் பிரான்சுக்கு வந்திருக்கிறார். மேடம், கடந்த மாதம் தான் தனது 46வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது கூடுதல் செய்தி!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் செல்வரத்தினம் இராசம்மா
Roissy en brie (பிரான்ஸ்), யாழ்ப்பாணம் வண்வடமேற்கு
வயது : 87
இறப்பு : 12 Jan 2026
-
125






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan