படப்பிடிப்பில் இளம் நடிகர் மரணம்...
7 வைகாசி 2025 புதன் 19:42 | பார்வைகள் : 2387
ரிஷப் ஷெட்டி இயக்கி வரும் ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் படப்பிடிப்பில் 33 வயதேயான துணை நடிகர் உயிரிழந்தது படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.கன்னட இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் சப்தமி கவுடா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு அஜ்னீஸ் லோக்நாத் இசையமைத்தார். ரூ.16 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடி வசூலை ஈட்டி மிரட்டியது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதால் மற்ற தென்னிந்திய மொழிகளிலும் படம் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘காந்தாரா சாப்டர் 1’ என பெயரில் உருவாகி வருகிறது. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதில் பங்கேற்று இருந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் MF கபில் என்பவர் மரணம் அடைந்து இருக்கிறார் என்கிற செய்தி சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
படப்பிடிப்புக்கு இடையே மதிய உணவு இடைவெளியில், Kollur Souparnika ஆற்றில் அவர் குளித்த போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அவரை தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் இறங்கிய நிலையில் மாலையில் அவர் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும் படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan