ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்…..
7 வைகாசி 2025 புதன் 17:12 | பார்வைகள் : 4247
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், தனுஷ் படத்தை இயக்கிய இயக்குநரின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
’மாநகரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், ’கைதி’, ’மாஸ்டர்’, ’விக்ரம்’, ’லியோ’ என தொடர் வெற்றிப் படங்களை கொடுத்தார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’கூலி’ படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில், அடுத்ததாக அவர் ’கைதி 2’ படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஏற்கனவே ’மாஸ்டர்’ படத்தில் ஒரு சிறிய கேரக்டரிலும், ’சிங்கப்பூர் சலூன்’ படத்தில் நடித்த லோகேஷ், ஸ்ருதி ஹாசனுடன் "இனிமேல்" என்ற ஆல்பத்தில் நடித்தார் என்பது தெரிந்ததே.
தற்போது, தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ உட்பட சில படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றைப் படம் இயக்க திட்டமிட்டிருந்த அருண் மாதேஸ்வரன், அந்த படம் தாமதமாவதால் அதற்கு முன் லோகேஷ் நடிக்கும் இந்த புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன் ஆரம்ப கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan