உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்காத மஹிந்த ராஜபக்ஷ
7 வைகாசி 2025 புதன் 12:54 | பார்வைகள் : 3017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகயீனம் காரணமாக உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி மாத்திரமே மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ மகா வித்தியாலயத்தில் தனது வாக்கினை பதிவு செய்திருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷ சுகயீனம் காரணமாக அண்மையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ள நிலையில் வைத்திய ஆலோசனைகளின் படி தனது வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan