பிரதமர் மோடியுடன் விமானப்படை தலைமை தளபதி சந்திப்பு!
5 வைகாசி 2025 திங்கள் 04:05 | பார்வைகள் : 3649
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருக்கும் நிலையில், விமானப்படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 22ம் தேதி நடத்திய தாக்குதலில், 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க, முப்படைகளுக்கு முழு அதிகாரத்தை மத்திய அரசு அளித்துள்ளது.
அதே நேரத்தில், பொருளாதார ரீதியில் பாகிஸ்தானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலும், சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் நோக்கிலும் பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருக்கிறது.
இந்நிலையில், இன்று (மே 04) விமானப்படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது பயங்கரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக, விமானப்படை தலைமை தளபதி உடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan