கனடாவின் கியூபெக் மாகாணத்தில் சீரற்ற காலநிலை….
1 வைகாசி 2025 வியாழன் 08:34 | பார்வைகள் : 2852
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் வீசிய சூறாவளியினால் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மின்சாரம் இன்றி அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
“சில பகுதிகளில் மணிக்கு 100 கிமீ-ஐ கடந்த காற்று காரணமாக மின்கம்பி அமைப்புகளில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.
பல உபகரணங்களை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது," என கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை (ECCC) தெரிவித்துள்ளது.
மாண்ட்ரியல் தீவின் பல பகுதிகளில் மரங்கள், மின்கம்பிகள் விழுந்ததுடன், வெர்டுன் Verdun மற்றும் அவுன்ஸ்டிக் கார்டிவெலி Ahuntsic-Cartierville பகுதிகளில் இரு தீவிபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.
செயின்ட் லாவுரன்ட் Saint Laurent பகுதியில் உள்ள Air Canada கட்டிடத்தின் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், பலத்த காற்று காரணமாக 15 வயது சிறுவன், மீது மரம் வீழ்ந்த காரணத்தினால் குறித்த சிறுவன் ஆபத்தான நிலையில் வைத்தயிசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சூறாவளியின் உச்ச வேளையில், 144,000க்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரமின்றி இருந்தனர்.
“மின் சேவையை விரைவாக மீட்டெடுக்க 500-க்கும் மேற்பட்ட குழுக்கள் பணி ஆற்றிவருகின்றன,” என ECCC குறிப்பிட்டுள்ளது.
பாதிப்பு குறைந்த பகுதிகளில் இருந்து மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதற்கான திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan