இன்றுவரை இயங்கிவரும் - பிரான்சின் முதல் நூலகம்!
30 சித்திரை 2016 சனி 09:26 | பார்வைகள் : 25516
இன்று பிரான்சில் உள்ள ஒரு நூலகம் பற்றி தெரிந்துகொள்ளலாம்...! Bibliothèque Mazarine என அழைக்கப்படும் இந்த நூலகம் தான் பிரான்சில் கட்டப்பட்ட முதல் நூலகமாகும். வாருங்கள்.. தொடர்ந்து மேலும் சில தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
* 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த நூலத்தில் தான், பிரான்சின் பண்டைய கால மிக முக்கியமான புத்தகங்கள் இருக்கின்றன. பல அரிய நூல்கள், கை எழுத்து பிரதிகள் உட்பட பல பொக்கிஷமான நூல்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.
* Cardinal Jules Raymond Mazarin என்பவர் உருவாக்கிய நூலகம். இதுவே பிரான்சின் முதல் நூலகமும், இன்றுவரை இயங்கிக்கொண்டிருக்கும் பழமைவாய்ந்த நூலகமுமாகும்.
* இந்த நூலகத்தில் 1653ம் ஆண்டு, ஒரு திருட்டுச்சம்பவம் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான நூல்கள் அப்போது காணாமல் போய்விட்டன. அவற்றை இன்றுவரை திரும்ப பெற முடியாமல் போய்விட்டது.
* பின்னர் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிது புதிதாக நூல்கள் சேர்க்கப்பட்டு வந்தது. இன்று ஆறு இலட்சம் புத்தகங்களை கொண்டு பிரான்சின் மிகப்பெரும் நூலகமாக திகழ்கிறது.
* முதன் முதலாக அச்சடிக்கப்பட்ட 'Gutenberg Bible' நூல் இந்த நூலகத்தில் தான் இருக்கிறது. பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது.
* பிரான்சின் பொக்கிஷங்களான பல முக்கிய கையெழுத்து பிரதிகள் இங்கு பாதுகாக்கப்படுகிறது. மொத்தமாக 4600 கையெழுத்து பிரதிகள் இங்கு இருக்கின்றன.
* சனி, ஞாயிறு தவிர்த்து மீதி நாட்களில் எப்போதும் பொதுமக்களுக்காக திறந்திருக்கும் இந்த நூலகம். மேலும் வருடத்தின் ஓகஸ்ட் மாதத்தின் முதல் திகதியில் இருந்து, 15ம் திகதி வரை மூடப்பட்டிருக்கும்.
* 23 Quai de Conti, 75006 Paris, France. மேற்படி விலாசத்தில் இயங்கி வருகிறது இவ் நூலகம்.
உலகின் தலை சிறந்த நூலகங்களில் ஒன்றாக திகழும் இந்த நூலகத்தை நீங்கள் அவசியம் பார்வையிட வேண்டும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan