ஆஸ்திரேலியாவில் வெள்ளம் - 4 பேர் பலி

24 வைகாசி 2025 சனி 05:59 | பார்வைகள் : 1306
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேவ்ஸ் மாகாணத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடுகள், சாலைகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
கனமழை, வெள்ளத்தில் சிக்கிய பலரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கனமழை, வெள்ளத்தால் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கனமழை மேலும், பலர் மாயமாகியுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கனமழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1