யாழில் சேற்றில் விழுந்து உயிரிழந்த இளைஞன்

19 வைகாசி 2025 திங்கள் 10:21 | பார்வைகள் : 2914
யாழில் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் மது போதையில் சேற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
கே.கே.எஸ். வீதி வண்ணார் பண்ணையைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே இதில் உயிரிழந்துள்ளார்.
மேற்படி இளைஞரின் வீட்டார் மட்டக்களப்புக்கு சென்ற நிலையில் இளைஞன் ஒருவர் வீட்டில் மது விருந்து நடத்தியுள்ளார்.
விருந்து முடிந்த நிலையில் வெளியில் சென்ற இளைஞர் சேற்றில் விழுந்து உயிரிழந்தார்.
இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டார்.
இறப்பிற்கான காரணத்தை கண்டறிய பிரேதபரிசோதனை மாதிரிகள் பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1