GAP அதிர்ச்சி! பள்ளி ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள்!
17 வைகாசி 2025 சனி 02:09 | பார்வைகள் : 4524
Hautes-Alpes இன் Gap பகுதியில் உள்ள புகழ்பெற்ற செயின்ட் ஜோசப் தனியார் கத்தோலிக்க பள்ளி (établissement privé catholique Saint-Joseph à Gap) தற்போது பாலியல் விவகாரச் சர்ச்சையில் சிக்கிப் பெரும் சர்ச்சையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
ஒரு ஆசிரியர் மீது கடந்த 2015, 2017 ஆண்டுகளில் மாணவிகளை பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகவும், மேலும் இன்றும் பயிலும் மாணவிகளிடம், சமூக ஊடகங்கள் மூலம் தவறான முறையில் தொடர்பு கொண்டு பாலியல் ஆசைகளைத் தூண்ட முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சாதாரண தவறல்ல, நேரடி பாலியல் வன்முறையே என விசாரணைக்கு நெருக்கமான ஒரு தகவல்; உறுதிப்படுத்தியுள்ளது.
அகிலப்பிராந்தியக் கல்வித் துறையும், மறைமாவட்ட அதிகாரிகளும், உறுதியான நடவடிக்கைகளுக்கு முன்வந்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஏற்கனவே ஏப்ரல் 2025 இல் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மறைமாவட்டத் தலைவர் 'நாம் மறைக்க விரும்பவில்லை. பெற்றோர்களும் மாணவர்களும் உண்மையை தெரிந்திருக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.
மௌனத்தைத் துண்டிக்க வேண்டும். உண்மை வெளிவரட்டும். எது நடந்ததோ அதற்காக நாங்கள் நடவடிக்கை எடுக்க தயார் என இந்தக் கல்விமையத்தின் அதிபர் தெரிவித்துள்ளார்.
அனைத்து பெற்றோருக்கும் தகவல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தற்போது வரை மனநிலை ஆற்றுகப்படுத்தல் மையம் அமைக்கப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் தேவை ஏற்படுமானால் செயல்பட தயார் என்றும் அதிபர் தெரிவித்துள்ளார்.
சமீப காலத்திலேயே, சில மாணவர்கள், தற்போது பள்ளியில் கல்வி கற்பவர்களே, இந்த ஆசிரியர் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆசிரியர் சமூக ஊடகங்கள் வழியாக நெருக்கம் ஏற்படுத்தி புகைப்படங்கள் கேட்பதாகவும், பாலியல் இச்சையுடன் தொடர்பு கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
கேப் மாவட்ட நீதிமன்றம், 'குழந்தைகளை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் குற்றச்சாட்டு (corruption de mineurs) எனும் பிரிவின் கீழ், ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ளது. நீதித்துறை அதிகாரிகள் இதை மிகுந்த பொறுப்புடன் கையாள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan