Chartres பேராலயத்தை சுற்றி மரங்களுக்குப் பதிலாக நிழல் குடைகளா? அதிர்ச்சியில் மக்கள்!

11 சித்திரை 2025 வெள்ளி 12:28 | பார்வைகள் : 3413
2024 அக்டோபர் 2 அன்று, பேராலயத்தை சுற்றி வரிசையாக இருந்த நோயுற்ற பத்து மரங்களை மரங்களை நகராட்சி வேரோடு வெட்டியது. இந்த நடவடிக்கை, பேராலயத்தை சுற்றியுள்ள பகுதியை மறுசீரமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டது.
நகராட்சி அதிகாரிகள், இந்த மரங்களை வெட்டுவதன் மூலம், குளிர்காலங்களில் பார்வையாளர்களுக்கு சுவாரஸியமான இடத்தை உருவாக்க விரும்பினார்கள். திட்டப்படி, மரங்களை வெட்டிய பின்னர், மரபணு மாற்றம் செய்த, புதிய மரங்களை நடுவதன் மூலம் இதனை ஈடு செய்வதாக நகராட்சி உறுதியளித்தது.
ஆனால் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான பேராலயத்தை சுற்றியுள்ள பகுதியில் 32 நிழல் குடைகள் (parasol) நிறுவப்பட்டுள்ளன. இந்த முடிவுக்கு chartres மக்கள் கடும் எதிர்ப்பையும் சந்தேகங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
“இது சுற்றுச்சூழலுக்கு எதிரான நடவடிக்கை,” என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். நகராட்சி இதனை நவீன மயமாக்கலின் ஒரு பகுதியாக விளக்கினாலும், பொதுமக்கள் இதை ஏற்க முடியாத செயல் எனக் கூறி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1