மூன்று பூங்கா!! - Parc de Bercy!!
12 மார்கழி 2016 திங்கள் 10:30 | பார்வைகள் : 23314
பரிசின் 12ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள இந்த Parc de Bercy, மூன்று விதத்தில் மூன்று பூங்காக்களை கொண்டுள்ளது. அவசியம் செல்லவேண்டிய இந்த பூங்கா குறித்த சில தகவல்கள் உங்களுக்காக!!
சென் நதியை ஒட்டி அமைந்துள்ள இந்த பூங்கா ஒன்றும் புராதன காலத்து பூங்கா அல்ல... 1994இல் இருந்து 1997இல் அமைக்கப்பட்டது. François Mitterrand ஜனாதிபதியாக இருந்த காலத்தில்!!
Bernard Huet, Madeleine Ferrand, Jean-Pierre Feugas, Bernard Leroy போன்ற கட்டிட வரை கலைஞர்கள் எண்ணத்தில் உருவான இந்த பூங்கா, மொத்தம் 13.9 ஹெக்டேயர் நிலப்பரப்பை கொண்டுள்ளது.
மூன்று விதமான 'தீம்'களில்.. மூன்றுவித பூங்காக்கள் இங்கு உள்ளன. இவற்றை நடை பாலம் இணைக்கிறது. முதலாவது, குன்றுகளும் மீன் பிடிக்கும் பகுதிகளும் என Romantic Garden இது. இரண்டாவது, தாவரவியல்களும், மலர்ப்படுக்கைகளும் கொண்ட Flowerbeds பூங்கா..., மூன்றாவது புற்களும் உயர்ந்த மரங்களும் கொண்ட The Meadows பகுதி.. மூன்றுமே மனதுக்கு இதமாகவும் மகிழ்ச்சியையும் அளிக்கக்கூடிய வகையில் உருவாக்கியுள்ளார்கள்.
இந்த பூங்காவின் ஒரு பகுதியில் உள்ள
Simone de Beauvoir நடை மேடையூடாக சென்றால் Bibliothèque nationale de France நூலகத்துக்குச் செல்லலாம். மேலும் Musée des Arts Forains கூட தொட்டுவிடும் தூரத்தில் தான் உள்ளது.
மாலை வேளைகளில், உங்கள் மனதுக்கு பிடித்த விதத்தில் பிடித்த பகுதிக்குச் சென்று ரசித்துவிட்டு வரலாமே!!
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1