அனைத்து கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதி அநுர அழைப்பு
9 சித்திரை 2025 புதன் 13:35 | பார்வைகள் : 2462
அமெரிக்க வரிகளின் தாக்கம் குறித்து கலந்துரையாட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (10) கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்படி, இந்தக் கூட்டம் நாளை காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அமைச்சர் தனது X கணக்கில் ஒரு குறிப்பொன்றையிட்டு இதைக் கூறினார்.
இன்று காலை, 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த விடயம் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியைச் சந்திக்க அனுமதி கோரியதாக அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan