Paristamil Navigation Paristamil advert login

டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்கவில் ஆர்ப்பாட்டங்கள்

டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்கவில் ஆர்ப்பாட்டங்கள்

6 சித்திரை 2025 ஞாயிறு 16:36 | பார்வைகள் : 2472


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எதிராக அங்குள்ள முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

50 அமெரிக்க மாநிலங்கள் உட்பட 1,200 இடங்களில் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன.

'கைகளை விடுங்கள்' என்ற கோஷங்களை எழுப்பி மக்கள் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாகச் சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூகப் பிரச்சினைகள் முதல் பொருளாதார பிரச்சினைகள் வரை அமெரிக்க ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களில் உள்ள குறைகளை, போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் புதிய வரித் திட்டம் மற்றும் வெளியுறவுக் கொள்கை என்பவற்றையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் விமர்சித்துள்ளனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்