இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு பயணமான மோடி!

6 சித்திரை 2025 ஞாயிறு 10:46 | பார்வைகள் : 2185
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துக்கொண்டு சற்று நேரத்திற்கு முன்னதாக நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அதற்கமைய, இந்தியப் பிரதமர் தமிழகம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.
தமிழகத்தின் ராமநாதபுர மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று (06) திறந்து வைக்கிறார்.
பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.
இந்நிலையில் தனது இலங்கை விஜயம் தொடர்பில் இந்திய பிரதமர் X தளத்தில் பதிவொன்றை வௌியிட்டுள்ளார்.
“இலங்கைக்கான எனது விஜயத்தின்போதான அன்பான அரவணைப்புக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மக்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கொழும்புக்கான விஜயமாக இருந்தாலும் சரி, அநுராதபுரத்துக்கான விஜயமாக இருந்தாலும் சரி இரண்டுமே நமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாசார, ஆன்மீக மற்றும் நாகரீக உறவுகளை மீள உறுதிப்படுத்துவதாகவே அமைந்தன. இந்த விஜயம் நமது இருதரப்பு உறவுகளுக்கு நிச்சயமாக உத்வேகத்தை தரும்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1