ஸ்பெயினில் இருந்து தப்பி வந்த ஈஃபிள் கோபுரம்!
3 தை 2017 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 22320
ஈஃபிள் கோபுரம் பற்றி தொடர்ச்சியாக நிறைய விஷயம் தெரிந்துகொள்கிறோம் இல்லையா... நல்லதுதானே..! உங்களுக்குத் தெரியுமா... ஈஃபிள் கோபுரம் பரிசில் இருப்பது ஒரு 'ஜஸ்ட் மிஸ்ட்' செயல்! உண்மையில் ஈஃபிள் இருந்திருக்க வேண்டியது ஸ்பெயினில்!
உண்மைதான். ஈஃபிள் கோபுரத்தின் அனைத்து பெருமைகளும் ஸ்பெயினுக்கு சென்றிருக்கும்... நாங்கள் அனைவரும் விடுமுறையில்.. ஸ்பெயினுக்குச் சென்று, 'நாங்கள் ஈஃபிள் கோபுரத்தை பார்த்து விட்டு வருகிறோமே!!' என சொல்லும் படி ஆகியிருக்கும். நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. உலக வர்த்தக கண்காட்சியில் ஈஃபிள் கோபுரம் நிறுவப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். 1889 ஆம் ஆண்டு.
ஆனால், அதற்கு முந்தைய வருடம் 1888 ஆம் ஆண்டு, ஸ்பெயினின், பர்சலோனா நகரில் உலக வர்த்தக கண்காட்சி இடம்பெற்றபோது, ஈஃபிள் கோபுரத்தை நிறுவுவதற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அப்போது ஈஃபிளின் 'ஐடியா' - ' ஐய்யயோ... அவ்வளவு பெரிதாகவா... விபரீத விளையாட்டு!' என மறுத்துவிட்டார்களாம். வீணான செலவு, மற்றும் ஆபத்தானது என ஈஃபிள் கோபுரத்தின் 'ஐடியாவை' வேண்டாம் என ஒதுக்க... கடும் கோபத்துடன்... அடுத்த உலக வர்த்தக கண்காட்சிக்காக காத்திருந்தார் Gustave Eiffel!!
அடுத்த வருடமே, பரிசில் இடம்பெற்றது உலக வர்த்தக கண்காட்சி! 'ஈஃபிளின்' ஐடியாவை சொன்னதும்... வாரி அணைத்துக்கொண்டது பரிஸ் நகரம்!! இதோ... பத்து இலட்சம் மின் விளக்குகளோடு கம்பீரமாய் ஜொலிக்கிறாள் இந்த 'இரும்பு மனுஷி'!!!






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan