பரிசின் நீளமான வீதி!!
4 தை 2017 புதன் 11:30 | பார்வைகள் : 23542
பரிசை பற்றி எத்தனையோ புதுமையான விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. சில வாரங்களுக்கு முன்னர் பரிசில் உள்ள மிகச்சிறிய தெரு குறித்து தெரிந்துகொண்டோம். தற்போது பரிசில் உள்ள மிகப்பெரிய தெரு குறித்து பார்க்கலாம்.
பரிசின் மிகச் சிறிய தெரு, rue des Degrés ஆகும். 6 மீட்டர் நீளம் கொண்ட இந்த தெரு 2ஆம் வட்டாரத்தில் உள்ளது. பரிசில் உள்ள மிக நீளமான தெரு, இரு வட்டாரங்களை இணைக்கிறது. Rue de Vaugirard என பெயரிடப்பட்ட இந்த வீதி, ஆறாம் வட்டாரத்தில் இருந்து பதினைந்தாம் வட்டாரத்தை ஊடறுத்துச் செல்கிறது. 4,300 மீட்டர்கள் (14,100 அடி) நீளம் கொண்ட இந்த வீதிதான் பரிசின் 20 வட்டாரங்களுக்குள்ளும் மிக நீளமான வீதியாகும்.
ஆறாம் வட்டாரத்தின் Jardin du Luxembourg இல் ஆரம்பிக்கும் இவ்வீதி, பதினைந்தாம் வட்டாரத்தின் Porte de Versailles இல் வந்து நிறைவு பெறுகிறது. 15 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த சாலையில் பரிசின் பல முக்கியமான கட்டிடங்கள், அரச அலுவலகங்கள் இறைந்து கிடக்கின்றன. எப்போதும் பிஸியாக இருக்கும் வீதியில் நீங்கள் செல்ல நேரிட்டால்... 'இதுதான் பரிசின் மிக நீளமான வீதி!' என தெரிந்துவைத்துக்கொண்டு செல்லுங்கள்.. நண்பர்களுக்கும் சொல்லுங்கள்!!






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan