இலங்கையில் உயர் தரப் பரீட்சையில் முதலிடம் பெற்றவர்களின் விபரம்
27 சித்திரை 2025 ஞாயிறு 09:02 | பார்வைகள் : 8237
2024 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, சிறந்த பெறுபேற்றை பெற்றவர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, உயிரியல் பிரிவில் குருநாகல் மலியதேவ மகளிர் வித்தியாலய மாணவி ஹேகொட ஆராச்சிகே சந்திதி நிம்ஹார நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
கணிதப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலித்தை கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவன் லெந்து ரணசிங்க குமாரகே பெற்றுள்ளார்.
கொழும்பு விசாகா கல்லூாியின் மாணவி கங்கானிகே அமாஷா துலாரி பெரேரா, வணிகப் பிரிவில் நாட்டிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
அதேநேரம் ரத்னாவலி பாலிகா வித்யாலய மாணவி செனெலி சமத்கா ரணசிங்க, கலைப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan