அஜித்தின் 64 மற்றும் 65 வது படத்தை யார் இயக்கப் போகிறார்?
25 சித்திரை 2025 வெள்ளி 14:26 | பார்வைகள் : 3269
அஜித் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10 அன்று குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு இப்படம் தரமான விருந்து படைத்திருக்கிறது. அதேசமயம் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியுள்ளது.
அந்த வகையில் இப்படம் தற்போது வரை உலக அளவில் ரூ. 250 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இந்த படத்தின் கிளைமாக்ஸில் ஏகே 64 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போகிறார் என்பது போன்ற ஒரு ஹிண்ட் கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போது கார் பந்தயத்தில் பிசியாக இருந்து வரும் அஜித், 2025 அக்டோபர் மாதத்திற்கு பின்னர்தான் அடுத்த படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் நடிகர் தனுஷ், அஜித்தை வைத்து படம் இயக்கப் போவதாகவும் பேச்சு அடிபடுகிறது.இந்த நிலையில் தான் அஜித்தின் 65 ஆவது படத்தை (ஏகே 65) புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் இயக்கப் போவதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஆனால் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தரப்பில் இந்த தகவலில் உண்மை இல்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் அஜித்தின் 64 மற்றும் 65 வது படத்தை யார் இயக்கப் போகிறார்? என்பது தொடர்பான உறுதியான தகவல் வெளியாகும் என நம்பப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan