Paristamil Navigation Paristamil advert login

'சர்கஸ்' - யானைகளுக்கு Good Bye!!

'சர்கஸ்' - யானைகளுக்கு Good Bye!!

28 ஆவணி 2016 ஞாயிறு 11:05 | பார்வைகள் : 21181


இந்த கலியுக காலத்திலும் மிருகங்களை வைத்து செய்யும் சாகசங்களை காண சர்கஸ்களுக்கு செல்பவர்கள் உண்டு. குட்டியாக இருக்கும் நாற்காலியில் யானைகள் ஒற்றைக்காலில் நின்று சாகசம் செய்வதும்... சாகச வீரர்கள் கயிற்றில் நடப்பதும்... பல்டி அடிப்பதுமாக அசரடிப்பார்கள்! போகட்டும்... சர்கஸ் மிருகங்களுக்கு விடுதலை வேண்டும்... இனியும் மிருகங்களை அடைத்து வைத்தல் நல்லது இல்லை என 'சர்கஸ்'களுக்கு எதிராக ஒரு குழு ஒன்று கிளம்பியுள்ளது.  
 
பரிசுக்குள் இருக்கும் அனைத்து சர்கஸ்களிலும் இருக்கும் யானைகள் உட்பட அனைத்து மிருகங்களையும் விடுதலை செய்யவேண்டும், இது மிருகங்களை வதைப்பதாகும். அவை மிகவும் பாதிக்கப்படுகின்றன என விலங்குகள் பாதுகாப்பு அமைப்பும், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழு ஒன்று தெரிவித்துள்ளது. 
 
இது குறித்த கடிதம் ஒன்றை பரிஸ் நகர முதல்வர் ஆன் இல்தாகோவுக்கு எழுதி அனுப்பியுள்ளார்கள். என்ன முடிவு எடுக்கப்படும் என தெரியவில்லை... இதெல்லாம் சரிதான்... ஆனால் மிருகங்களோடு மனிதர்களும் தான் சாகசம் செய்கிறார்கள்... அவர்களை பற்றி யார் கவலைப்படுகிறார்கள்?!

வர்த்தக‌ விளம்பரங்கள்