புதிய மைக்ரோ கண்டம் கண்டுபிடிப்பு

22 சித்திரை 2025 செவ்வாய் 16:06 | பார்வைகள் : 2968
கனடாவிற்கும் கிரீன்லாந்துக்கும் இடையே புதிய மைக்ரோ கண்டமொன்று (Micro Continent) கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
சுவீடன் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய ஆய்விலேயே கடலின் அடியில் புதைந்து கிடக்கும் Proto Microcontinent எனப்படும் இந்த புதிய நிலப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிரீன்லாந்துக்கும் கனடாவின் பாபின் தீவிற்கும் இடையே உள்ள Davis Strait எனும் பகுதியில் இது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலப்பகுதி சுமார் 19 முதல் 24 கிலோமீற்றர் வரை அகலமுள்ளதும், சாமான்ய நிலப்பரப்பை விட அடிக்கடி அடர்த்தியுடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் புது மைக்ரோகண்டம், கிரீன்லாந்தும் வட அமெரிக்காவும் பிரிந்த போது முழுமையாக பிரியாமல் ஒரு பகுதி இணைந்தே இருந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கிரீன்லாந்து பிரிதல் ஆரம்பமான நிலையில், 56 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த புதிய மைக்ரோகண்டம் உருவாகத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 33 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கிரீன்லாந்து Ellesmere தீவுடன் மோதியதனால் அப்பகுதி தற்போது நிலையானதாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது போன்ற மைக்ரோகாண்டினெண்ட்கள் பிற இடங்களிலும் (Jan Mayen, Tasman Rise) காணப்பட்டுள்ளன. பூமியின் உள் கட்டமைப்பு நிலப்பலகைகள் இயக்கத்தில் முக்கிய பங்காற்றுவதை இது வெளிப்படுத்துகின்றது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1