பிரான்சில் சோளப்பொரி விற்கும் அமெரிக்காவின் பிரபல நடிகை

24 ஐப்பசி 2016 திங்கள் 10:30 | பார்வைகள் : 23455
அமெரிக்காவின் பிரபலமான நடிகை Scarlett Johansson பிரான்சில் பாப்கார்ன் என அழைக்கப்படும் சோளப்பொரி விற்கிறார் என்றால் நம்புவதற்கு கஷ்ட்டமாகத்தான் இருக்கும்! அதனால் நம்பும் படி சொல்கிறோம். சோளப்பொரி விற்கும் கடையை பிரான்சில் திறந்துள்ளார்.
கேப்ட்டன் அமெரிக்கா, லூசி, அயர்ன் மேன், அவெஞ்சர்ஸ் போன்ற ஹாலிவுட் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த Scarlett Johansson பிரான்சில், தன் கணவருடன் சேர்ந்து சோளப்பொரி விற்கும் கடையினை திறந்துள்ளார்.
Scarlett Johanssonஇன் பேச்சாளர் இதுகுறித்து தெரிவிக்கும் போது 'Scarlett Johansson சோளப்பொரியின் மீது அளவற்ற காதல் கொண்டுள்ளார். மிகச்சிறந்த சோளத்தின் சுவையை உலக மக்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் கிளைகள் உலகம் முழுவதும் ஆரம்பிக்கவுள்ளார்!' என தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை பிரான்சில் கடைத்திறப்பு விழாக்கான அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு, நல்ல ஒரு திறப்பு விழா நாளுக்காக காத்திருக்கிறாராம் Scarlett Johansson. இருக்கட்டும்... பிரான்சில் எங்கே கடை உள்ளது?? Marais மாவட்டத்தில்!
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1