8 ஆண்டுகளுக்கு பிறகு தந்தையான இந்திய கிரிக்கெட் வீரர் - குவியும் வாழ்த்துக்கள்

16 சித்திரை 2025 புதன் 13:29 | பார்வைகள் : 1423
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக வலம் வந்தவர் ஜாகீர் கான்.
2000ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக போட்டியில் கங்குலி தலைமையின் கீழ் அறிமுகமானவர் ஜாகீர் கான்.
2014ஆம் ஆண்டு வரை 14 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடி வந்த ஜாகீர் கான், 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளையும், 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 282 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
ஜாகீர் கான் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி, சகரிகா காட்கே என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்.
‘சக் தே இந்தியா’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த சகரிகா காட்கே, ஹிந்தி, மராத்தி, பஞ்சாபி மொழி படங்களில் நடித்துள்ளார்.
திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இந்த தம்பதிகள் இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளனர்.
தங்களது குழந்தைக்கு, ஃபதேசிங் கான் (Fatehsinh Khan) என்ற பெயரை சூட்டியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
பெற்றோர் ஆன இந்த தம்பதியினருக்கு, கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என்று அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1