இலங்கையில் E-சிகரெட்டுகள் பயன்படுத்துவோரை கைது செய்ய நடவடிக்கை
10 பங்குனி 2025 திங்கள் 03:27 | பார்வைகள் : 11370
இலங்கையில் வேப்பிங் அல்லது E-சிகரெட்டுகள் சட்டவிரோதமானது என்று பாராளுமன்ற நிதிக்குழுவில் தெரியவந்துள்ளது.
அதை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு திட்டம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாகவும், E-சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஏப்ரல் முதலாம் திகதி முதல் சிகரெட்டுகளுக்கு விதிக்கப்படும் நிறுவன வருமான வரியை 45% ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் சிகரெட் வரி படிப்படியாகக் குறைந்து வருவதாக தெரிவித்த பொது நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா, சிகரெட்டுகள் மீதான வரியை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் ஆலோசனை வழங்கினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan