தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்
5 பங்குனி 2025 புதன் 14:12 | பார்வைகள் : 3734
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்(Imran Khan) தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இம்ரான் கான் 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக இருந்தார்.
பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரதமர் பதவியை இழந்த இம்ரான் கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்த வழக்குகளில் 2023 ஒகஸ்ட் 5ஆம் திகதி கைது செய்யப்பட்ட இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இம்ரான் கான் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், பயங்கரவாதிகளை அடைத்து வைக்கும் தனிமைச்சிறையில் அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழக்க வைக்க சதித்திட்டம் தீடப்படுவதாகவும் அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
சிறையில் உள்ள இம்ரான் கானை 6 பேர் சந்திக்கலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்தபோதும், அவரை சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகவும் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் தெரிவித்துள்ளது.
அத்துடன் இம்ரான் கானை சந்திக்க அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan