பிரான்சில் பெர்லின் சுவர்!! -

13 மாசி 2017 திங்கள் 10:30 | பார்வைகள் : 23694
பெர்லின் சுவர் குறித்து உங்களுக்கு தெரிந்தே இருக்கும். ஜெர்மனிக்கு உரித்தான இந்த பெர்லின் சுவரின் அடையாளத்துக்காக ஒற்றை தூன்களாகவோ... அல்லது ஒற்றை சுவராகவோ ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா என உலகம் முழுவதும் ஆங்காங்கே கட்டியுள்ளார்கள். ஐரோப்பா முழுவதும் என்றால்.. அதில் பிரான்ஸ் இல்லாமல் எப்படி...?? பரிஸ் உட்பட நாடு முழுவதும் உள்ள 'பெர்லின் சுவர்கள்' குறித்து பார்க்கலாம்!!
Angers மாவட்டத்தில் உள்ள Le Quai திரையரங்கினுள் இந்த பெர்லின் சுவரின் ஒரு பகுதியை அமைத்துள்ளார்கள். அதேபோல் Caen மாவட்டத்தின் Mémorial pour la Paix யுத்த அருங்காட்சியகத்தில் ஒரு துண்டு சுவர் வைக்கப்பட்டுள்ளது.
Strasbourg இலும் உள்ளது, எங்கே என்றால்... ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்துக்கு (European Court of Human Rights) வெளிப்புறம்!
இது தவிர, பரிசுக்குள் மொத்தம் இரண்டு இடங்களில் பெர்லின் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று La Défense நகரத்தில், அரச அலுவலக கட்டிடத்துக்கு அருகே ஒரு பெர்லின் சுவர் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மற்றையது Porte de Versailles மெட்ரோ தொடருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கெல்லாம் இருக்கும் சுவற்றை இனிமேல் பார்க்க நேர்ந்தால்... குழம்பிவிடாமல் இருக்க இந்த பதிவு உதவும் என நம்புகிறோம்!!
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1