Aéroports de Paris - சில தகவல்கள்!!

2 சித்திரை 2017 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 23110
இல்-து-பிரான்சுக்குள் இருக்கும் சில விமான நிலையங்களின் பெயரைக் கூறுங்கள்... என்றால்.. கேள்வியை முடிக்கும் முன்னரே பதில்களை பட்டியலிட ஆரம்பித்துவிடுவீர்கள்..!! இந்த விமான நிலையங்களை எல்லாம் இயக்கும் ஒரு 'தலை' நிறுவனம் தான் Aéroports de Paris!!
71 வருடங்களுக்கு முன்னர், 24 ஆம் திகதி, ஒக்டோபர் 1945 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் பிரதான நோக்கம் விமான நிலையங்களை இயக்குவதும் பராபரிப்பதுமாகும். இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்குள் Charles de Gaulle சர்வதேச விமான நிலையம், Orly விமானநிலையம், மற்றும் Le Bourget விமானநிலையம் இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் முக்கிய விமான நிலையங்களாகும்.
இவை தவிர மொத்தம் 14 விமான நிலையங்கள் இந்த நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் இதன் தலைமைச் செயலகம் உள்ளது.
இந்த நிறுவனம் அல்ஜீரியா, பாக்கிஸ்தான், எகிப்த், லிபியா, துருக்கி என பலதரப்பட்ட நாடுகளில் தன் சேவைகளை வழங்கி வருகிறது. உலகம் முழுவதும் 9000 பணியாளர்கள் பணி புரிகிறார்கள். (2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின் படி)
இத்தனை பெருமைகளோடும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய 'விமானநிலைய குழுமம்' இதுவாகும்!!
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1