இலங்கையில் நீர் கட்டணத்தை 10 முதல் 30 சதவீதம் வரை குறைக்க திட்டம்
5 மாசி 2025 புதன் 09:29 | பார்வைகள் : 8833
இலங்கையில் நீர் கட்டணத்தை 10 முதல் 30 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டண குறைப்போடு ஒப்பிட்டு, நீர் கட்டணங்களையும் குறைப்பதில் கவனம் செலுத்தப்படுவதாகவும், இது குறித்து ஆராய குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த குழுவின் அறிக்கை அடுத்த சில நாட்களுக்குள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும், பின்னர் அது தொடர்பான முன்மொழிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan