Paristamil Navigation Paristamil advert login

தென்னிலங்கையில் ஏற்பட்ட பதற்றம் - மூவர் வெட்டிக்கொலை - ஐவர் கைது

தென்னிலங்கையில் ஏற்பட்ட பதற்றம்  - மூவர் வெட்டிக்கொலை - ஐவர் கைது

3 மாசி 2025 திங்கள் 08:52 | பார்வைகள் : 9558


அம்பலாந்தோட்டை, மாமடல பிரதேசத்தில் நேற்று (2) மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறின் விளைவாக மேற்படி கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

வர்த்தக‌ விளம்பரங்கள்